வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளை அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் துரைபழம் நாடார். இவருடைய மகன் சுடலைமணி (வயது 35). சமோசா வியாபாரியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் பெருமாள் (37), தி.மு.க. பிரமுகர் சுடலைமணி (33), மோகன்ராஜ் மனைவி தங்கசெல்வி ஆகிேயாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று நடந்த தகராறு தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் வியாபாரி சுடலைமணி மீது திசையன்விளை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் முன்ஜாமீன் பெற்று கடந்த 28-ந் தேதி ஊருக்கு வந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
இதை அறிந்த 3 பேரும் வியாபாரி சுடலைமணி வீட்டுக்கு சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வியாபாரி சுடலைமணி அங்குள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. பிரமுகர் சுடலைமணி உள்பட 3 பேரையும் கைது செய்தார். மேலும் போலீசார், வியாபாரி சுடலைமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் வியாபாரி சுடலைமணியின் உடலை வாங்க மறுத்து மகாதேவன்குளம் சாலையில் கிராம மக்கள் நேற்று சாலைமறியல் செய்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சமயசிங் மீனா விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story