மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி
காரைக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 58-வது ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் ஆகிய இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை நெல்லை மாவட்டம் வேலாங்குளம் கண்ணன் வண்டியும், 2-வது பரிசை கே.புதுப்பட்டி கவுசல்யா வண்டியும், 3-வது பரிசை பூந்தோட்டம் லத்திகா மற்றும் ரெத்தினக்கோட்டை அடைக்கலம் வண்டியும், 4-வது பரிசை சிங்கவனம் ஜமின்ராஜா வண்டியும் பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 26 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கோட்டணத்தாம்பட்டி தவமுருகு மற்றும் புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 4-வது பரிசை வைரிவயல் வீரமுனியாண்டவர் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை திருப்பன்துருத்தி ஆனந்தஅய்யனார் வண்டியும், 2-வது பரிசை பீர்க்கலைக்காடு பைசல் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி யாசிகா வண்டியும், 4-வது பரிசை அ.வல்லாளப்பட்டி பேச்சியம்மன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story