ராமேசுவரம் தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தி வைப்பு


ராமேசுவரம் தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 3 March 2022 1:18 AM IST (Updated: 3 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த சூறாவளி காற்றால் விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கியது.

ராமேசுவரம்
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த சூறாவளி காற்றால் விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கியது.
விசைப்படகுகள்
தமிழக பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசுவதோடு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுபோல் தமிழக கடலோர பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டதால் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. 
மூழ்கியது
இதனிடையே ராமேசுவரம் பகுதியில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக துறை முககடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று நங்கூர கயிறு அறுந்து படகானது கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் 400-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Next Story