மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
சிவகிரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி மாரியம்மாள்.
மாரியப்பன் குடித்துவிட்டு தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரியம்மாள் கோபித்துக் கொண்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை அழைத்து வருவதற்காக மாரியப்பன் சென்றார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த மாரியப்பன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story