15 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
15 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்க நேற்று ஆங்காங்கே வாகன சோதனை நடத்தினர். ெநல்ைல மாவட்டம் காவல்கிணறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குமரி மாவட்டம் நடைகாவு பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (வயது 35), தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தூத்துக்குடி பகுதியில் பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதே போல் பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்த போது ஒரு காரில் 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த கக்கன் நகரை சேர்ந்த கணேசன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி விலக்கு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது, ஒரு மினி லாரியில் 45 மூட்டைகளில் 2¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சங்கரன்கோவிலை சேர்ந்த டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story