பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு; அக்காள், தங்கை கைது


பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு; அக்காள், தங்கை கைது
x
தினத்தந்தி 3 March 2022 1:27 AM IST (Updated: 3 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவை காண்பதற்காக தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி ஜெயா(வயது 50) என்பவரும் வந்திருந்தார். கோவில் அருகில் நின்றிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 மர்ம பெண்கள் ஜெயாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா கூச்சலிட்டார். 

  இதையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிய 2 மர்ம பெண்களையும் மடக்கிப் பிடித்து மேல்மலையனூர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி காளியம்மாள்(45), முத்துசக்தி மனைவி கவிதா(40) என்பது தெரியவந்தது. சகோதரிகளான அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story