செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயிலை இயக்க நடவடிக்கை
3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில்
கடந்த 2018-ம் ஆண்டு செங்கோட்டை- தாம்பரம், நெல்லை -தாம்பரம் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படும் என ெரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி நெல்லை- தாம்பரம் இடையே அந்தியோதயா ெரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ெரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் செங்கோட்டை-தாம்பரம் இடையே அறிவிக்கப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில் இது வரை இயக்கப்படவில்லை. இதுபற்றி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் ெரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.
முன்பதிவு
அதேபோல செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போதைய நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மக்களுக்கும், தென்காசி மாவட்ட மக்களுக்கும் சென்னைக்கு செல்ல சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ெரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ெரயில்களில் முன்பதிவு கிடைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. கடைசியாக தென்னக ெரயில்வே பொது மேலாளருடன் நடந்த எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சென்னை- செங்கோட்டை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்க வேண்டும் என்றும், செங்கோட்டை பயணிகள் ெரயிலை வழக்கம் போல தினசரி மூன்று முறை இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அவசியம்
ஆனாலும் தென்னக ெரயில்வே நிர்வாகம் இதுபற்றி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்களும், தென்காசி மாவட்ட மக்களும் தான்.
எனவே இந்த பிரச்சினையில் தென்மாவட்ட எம்.பி.க்கள் கூடுதல் கவனம் செலுத்தி இதுகுறித்து ெரயில்வே மந்திரியிடம் வலியுறுத்தி கூறி சென்னை தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயிலை இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் மதுரை -செங்கோட்டை பயணிகள் ெரயிலை வழக்கம்போல் தினசரி 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story