தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
தபால் துறையில் கிராமிய ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கு நியமிக்கப்பட்டு உள்ள விதிமுறைகள் அடங்கிய ஆணையை திரும்ப பெற வேண்டும். தபால் துறையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு கோட்ட தலைவர் எல்.தாமரைசெல்வி தலைமை தாங்கினார். இதில் கிராமிய தபால் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் கே.நடராஜன், பொருளாளர் வி.பி.ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story