காலில் காயத்துடன் சுற்றிய சிறுத்தைக்கு பவானிசாகர் வன கால்நடை மையத்தில் சிகிச்சை
கன்னிவாடி வனத்தில் காலில் காயத்துடன் சுற்றிய சிறுத்தைக்கு பவானிசாகர் வன கால்நடை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரக பகுதியில் உள்ள காராச்சிக்கொரை பகுதியில் வன கால்நடை மையம் உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம், பண்ணப்பட்டி கோம்பை வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்து றையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை மீட்டு கூண்டில் அடைத்து, சிகிச்சைக்காக பவானிசாகர் வன கால்நடை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 5 வயதுடைய அந்த ஆண் சிறுத்தைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுத்தையின் காயம் குணமடையும் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story