மூங்கில் காட்டில் தீ
மூங்கில் காட்டில் திடீரென தீ பிடித்தது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பெரியாறு பாசன பிரதான கால்வாய் கரையில் இருபுறத்திலும் சமூக காடுகள் திட்டத்தின் மூலம் பல ஆண்டு களுக்கு முன்புநடவு செய்த மூங்கில் வளர்ந்து அடர்ந்த காடாக காட்சி யளிக்கிறது. இதில் ஒரு பகுதி நகர்புற சாலையோரம் மயானத்தின் அருகில் மூங்கில் புதராக நிறைந்து காணப்படுகிறது. நேற்று மதியம்மூங்கில்கள் உரசியதில் திடீரென்று தீ பிடித்தது. அந்த தீ காய்ந்திருந்த மூங்கில் சருகுகளில் பற்றி மளமளவென்று எரிய தொடங் கியது. இதனால் சாலையில் வந்த வாகனங்கள் அதை கடந்து செல்ல முடியாமல் தயங்கின. இதுபற்றி தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story