காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை இன்று நிறைவு


காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை இன்று நிறைவு
x
தினத்தந்தி 3 March 2022 2:19 AM IST (Updated: 3 March 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து இன்று பெங்களூருவில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

பெங்களூரு: காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து இன்று பெங்களூருவில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

காங்கிரஸ் பாதயாத்திரை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது அணை கட்ட அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் அந்த அணை கட்ட இன்னும் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சங்கமா என்ற இடத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

ஆனால் அந்த சமயம் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அந்த மாதம் 13-ந் தேதியுடன் பாதயாத்திரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில் காங்கிரஸ் மீண்டும் தனது பாதயாத்திரையை தொடங்கியது. அந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் பெங்களூரு நகரை வந்தடைந்தது.

இன்றுடன் நிறைவு

இந்த நிலையில் நேற்று காலை பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை பல்லாரி சாலையில் உள்ள அரண்மனை மைதானத்தை வந்தடைந்தது. 

இந்த பாதயாத்திரை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற உள்ளது. இன்று காலை அரண்மனை மைதானத்தில் இருந்து புறப்படும் காங்கிரஸ் பாதயாத்திரை மாலை பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைகிறது.

அதன் பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் பாதயாத்திரை நிறைவு பெறுகிறது. 

இன்று நேஷனல் கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story