மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், அதற்கான புதிய வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.
மதுரை,
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், அதற்கான புதிய வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, மதுரை விமான நிலையத்தில் தற்போதுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய வான் போக்குவரத்து முனையம் கட்டவும் சுற்றுச்சூழல் அனுமதிக் காக பரிந்துரைத்தது.
அதன்படி, தற்போது, மதுரை விமான நிலைய விரிவாக்கத் திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட வரைபடமும் வெளியாகி உள்ளது. பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது என வரைபடம் மூலம் தெரிய வருகிறது.
மண் பரிசோதனை
குறிப்பாக ஓடுதள விரிவாக்கம், மதுரை- தூத்துக்குடி 4 வழிச் சாலையின் மேல்புறம் ஓடுதளம், ஓடு தளத்தின் கீழ் வாக னங்கள் செல்லும் வகையில் அண்டர் பாஸ் பாலம், புதிய சரக்கு முனையம், பயணிகள் வசதிக்காக மேலும் 2 முனையங்கள். அதில் ஒன்று கார் பார்க்கிங் வசதியுடனும் மற்றொன்று 4 ஏரோ பிரிட்ஜ் வசதியுடன் உள்ளது. இதுபோல், விமான சரக்கு போக்குவரத்துக்கு வரும் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம், புதிதாக வான் கட்டுப்பாட்டு வளாகம், ஊழியர்கள் குடியிருப்பு அதிக விமானங்கள் நிறுத்துமிடம் என பல வசதிகள் வர உள்ளதாக வரை படத்தில் காண்பிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு
இதில் புதிய வான் கட்டுப்பாடு மையப் பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அண்டர் பாஸ் முறையில் பாலம் அமைக்க, பரிசோதனைக்காக மண் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டு உள்ளது. இந்த அனைத்து பணிகளும் வருகிற டிசம்பர் 2023-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு ஜனவரி 2024-ல் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story