ஹங்கேரி எல்லையில் விமானத்திற்காக காத்திருக்கும் சாம்ராஜ்நகர் மாணவர்கள்
ஹங்கேரி எல்லையில் விமானத்திற்காக சாம்ராஜ்நகர் மாணவர்கள் காத்திருக்கிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொள்ளேகால்:ஹங்கேரி எல்லையில் விமானத்திற்காக சாம்ராஜ்நகர் மாணவர்கள் காத்திருக்கிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போர் பதற்றம்
உக்ரைனில் போர் பதற்றம் நில வருவதால் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்திய மாணவர்களை விமான மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. ஒரு சில மாணவர்கள் உக்ரைன் மக்களுடன் இணைந்து, ஹங்கேரி விமான நிலையத்திற்கு ரெயில் மூலம் செல்கின்றனர்.
ஆனால் அங்கு முறையான விமானம் இல்லை. இந்திய தூதரகம் சார்பில் உதவிகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஒடயரபாளையாவை சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் கூறியதாவது:-
கார்கிவ் பகுதியில் இருந்து பஸ் மூலம் ரெயில் நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து ஹங்கேரி எல்லைப்பகுதிக்கு செல்ல முயற்சித்தபோது, உக்ரைன் மக்களுக்குதான் முக்கியதுவம் வழங்கப்பட்டது. பின்னர் ஒருநாள் காத்திருந்தோம். அதன் பின்னர் தான் ரெயில் கிடைத்தது. தற்போது உக்ரைன் எல்லைப்பகுதியான ஹங்கேரியை அடைந்துள்ளோம். ஆனால் இங்கு விமானம் கிடைக்க இன்னும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பதுங்கு குழியில்...
இதேபோன்று கொள்ளேகாலை சேர்ந்த பூமிகா என்ற மாணவியும், ஹனூரை சேர்ந்த ஸ்வாதி என்ற மாணவியும் திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரெயில் மூலம் ஹங்கேரியை அடைந்துவிட்டனர். ஆனால் இன்னும் விமானம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்திய தூரகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கார்கிவ் பகுதியில் பதுங்கு குழியில் சிக்கியுள்ள குண்டலுபேட்டை தாலுகா கமரஹள்ளியை சேர்ந்த காவ்யா என்ற மாணவி எப்படி விமான நிலையத்திற்கு செல்வது, யார் உதவி செய்வார்கள் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
Related Tags :
Next Story