60 கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் 60 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் 60 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர்.
பட்டுக்கோட்டை நகராட்சி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 69பெண்கள் உள்பட 134 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், தி.மு.க. 13 வார்டுகளிலும்,
சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
பதவி ஏற்பு நிகழ்ச்சி
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான சுப்பையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகராட்சியில் வெற்றி பெற்ற 33 உறுப்பினர்களும் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றதையொட்டி நகராட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதவி ஏற்பு அரங்கினுள் புதிய கவுன்சிலர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நாளை காலை நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிராம்பட்டினம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 21 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதிரம்பட்டினம் நகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் சசிகுமார் புதிய நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Related Tags :
Next Story