ஆட்டு வியாபாரி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது
சித்ரதுர்காவில் ஆந்திர ஆட்டு வியாபாரி கொலையில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்கள் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
சிக்கமகளூரு: சித்ரதுர்காவில் ஆந்திர ஆட்டு வியாபாரி கொைலயில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது ெசய்துள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்கள் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
ஆட்டு வியாபாரி கொலை
சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா ராம்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கடந்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் மொலகால்மூரு போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் ராயதுர்கா அருகே பொம்மனஹட்டியை சேர்ந்த ஆட்டு வியாபாரி லிங்கப்பா என்பதும், அவரை மர்மநபர்கள் கொலை ெசய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ராம்புரா போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
மனைவி, கள்ளக்காதலன் கைது
இந்த நிலையில் போலீசார் ஆந்திராவுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, லிங்கப்பாவின் மனைவி பார்வதம்மா (வயது 32) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவர் லிங்கப்பாவை கள்ளக்காதலன் ஹொன்னூர் சாமி (28) என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு
அவர்களிடம் நடத்திய விசாரணையில், லிங்கப்பாவின் மனைவி பார்தவம்மாவுக்கும், ஹொன்னூர் சாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவா்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி லிங்கப்பாவுக்கு தெரியவந்துள்ளது.
இதனால், மனைவியையும், ஹொன்னூர் சாமியையும் லிங்கப்பா கண்டித்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் லிங்கப்பாவை தீர்த்துக்கட்ட அவரது மனைவி பார்வதம்மாவும், ஹொன்னூர் சாமியும் முடிவு செய்தனர். அதன்படி, ஆட்டு வியாபாரத்துக்காக லிங்கப்பா, மொலகால்மூருக்கு சென்றபோது, ஹொன்னூர் சாமி அவரை பின்தொடர்ந்து சென்று கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story