கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர


கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர
x
தினத்தந்தி 3 March 2022 3:00 AM IST (Updated: 3 March 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

பெரம்பலூர்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலகட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு, சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை திருப்பலியின்போது கடந்த ஆண்டு பயன்படுத்திய குருத்தோலையை எரித்து அதன் சாம்பலை பக்தர்களின் நெற்றியில் பங்கு தந்தையர்களால் சிலுவை அடையாளம் இடப்பட்டது. 
 இந்த தவக்காலத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த காலங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமை மாலை அந்தந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 

Next Story