தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தேவை
ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். ஆதலால் பொதுமக்களின் நலன் கருதி சீரான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எரியாத தெருவிளக்கு
மதுரை செல்லூர் கீழகைலாசபுரம் 2-வது மற்றும் 23-வது தெருவில் தெருவிளக்குகள் சில நாட்களாக எரியவில்ைல. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகின்றது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்
விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகின்றது. கழிவுநீர் செல்ல வழியின்றி சாைலயில் தேங்குகின்றது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று ேநாய்களும்ஏற்படுகின்றது. இதனால் அலுவலகம் வரும் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாசடைந்த குடிநீர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 21-வது வார்டு உள்ளிட்ட சில பகுதிகளில் வரும் தண்ணீர் மாசடைந்து வருகிறது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் நெல்லிக்குளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. குறிப்பிட்ட நேரம் மட்டும் வினியோகிக்கப்படும் நீரும் போதுமானதாக இல்லை. எனவே குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி செல்லும் சாலையில் வரலொட்டி கிராமத்தின் அருகில் பள்ளி வாகனங்களையும், இருசக்கர வாகனங்களையும் சாலையின் இருபுறமும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு சர்வீஸ்ரோடு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story