சேலத்தில் சாம்பல் புதன்கிழமையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை-திரளானவர்கள் பங்கேற்பு
சேலத்தில் சாம்பல் புதன்கிழமையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலத்தில் சாம்பல் புதன்கிழமையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பல் புதன்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
இந்த தவக்காலம் தொடங்கும் நாள் தான் சாம்பல் புதன்கிழமை ஆகும். இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.
சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் நேற்று காலை சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களது நெற்றியில் மறைமாவட்ட ஆயர், சாம்பலால் சிலுவை அடையாளத்தை வைத்தார்.
இதேபோல், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயம், கோட்டை சி.எஸ்.ஐ.லெக்லர் நினைவாலயம், சூரமங்கலம் சி.எஸ்.ஐ. திருத்துவ ஆலயம் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று சாம்பல் புதன்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Related Tags :
Next Story