புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 March 2022 3:14 AM IST (Updated: 3 March 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

புதிய தார்சாலை அமைக்கப்பட்டது
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே நரசிங்கன்பேட்டை துகிலி இணைப்பு சாலை சேதமடைந்து இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட  பகுதியில் புதிய தார்சாலையை அமைத்தனர். செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

Next Story