பூந்தமல்லி நகராட்சியில் பதவி ஏற்க சக்கர நாற்காலியில் வந்த தி.மு.க. கவுன்சிலர்


பூந்தமல்லி நகராட்சியில் பதவி ஏற்க சக்கர நாற்காலியில் வந்த தி.மு.க. கவுன்சிலர்
x
தினத்தந்தி 3 March 2022 3:15 PM IST (Updated: 3 March 2022 3:15 PM IST)
t-max-icont-min-icon

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் வந்த தி.மு.க. கவுன்சிலர் சக்கர நாற்காலிலேயே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க.-12, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-2, சுயேச்்சைகள்-6 வார்டுகளில் வெற்றி பெற்றனர். பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று காலை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் கவுன்சிலர்கள் 21 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி நாராயணன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். பூந்தமல்லி நகராட்சி 18-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் காஞ்சனா சுதாகர், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது விபத்தில் சிக்கினார். இதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தையும் சக்கர நாற்காலியில் சென்ேற மேற்கொண்டார். நேற்று கவுன்சிலராக பதவி ஏற்கவும் சக்கர நாற்காலிலேயே வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.


Next Story