பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 March 2022 6:28 PM IST (Updated: 3 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே பப்பாளி பழம் பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தறித்தொழிலாளி

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் விவேக்குமார் (வயது 18), ராஜீவ் (32). உறவினர்களான இவர்கள் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவரின் தறிக்குடோனில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் அவர்கள் வசித்து வரும் தொழிலாளர் குடியிருப்பு அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதியில் ஒரு இடத்தில் பப்பாளி மரத்தில் பப்பாளி பழுத்து இருந்ததை அவர்கள் 2 பேரும் பார்த்தனர். 

மின்சாரம் தாக்கியது

இதனையடுத்து, விவேக்குமார் அங்கு கீழே கிடந்த உயரமான இரும்பு குழாயை எடுத்து பப்பாளி பழத்தை பறிக்க முயன்றார். அப்போது, மரத்தின் அருகே சென்ற உயிர் மின் அழுத்த கம்பியில் இரும்பு குழாய் எதிர்பாராதவிதமாக பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் விவேக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். 
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே விவேக்குமார்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரை நடத்தி வருகின்றனர்.


Next Story