அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா


அங்காளபரமேஸ்வரி  கோவில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 3 March 2022 6:32 PM IST (Updated: 3 March 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா

அவினாசி காந்திபுரத்தில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 27ந் தேதி அம்மன் சாட்டு நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்னர் 1ந் தேதி  கொடியேற்றமும் 2ந் தேதி அதிகாலை அலகு தரிசனமும் நடந்தது. அன்று இரவு 8 மணி முதல் குண்டம் பூ போடுதல், அம்மனுக்கு வெண்ணெய் சாத்துதல் ஆகியன நடந்தது. இதைத்தொடர்ந்து 60 அடி குண்டத்தில் விறகு கரும்பு, நவதானியம் உள்ளிட்ட பொருட்கள் போட்டு விடிய விடிய அக்னி வளர்க்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 8 மணியளவில் குண்டம் சமன்படுத்தப்பட்டு அம்மன் திருவீதி உலா வந்து காட்சி தந்தார். 
அதைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் 9.30 மணியளவில் குண்டம் இறங்கி பூ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மகா தீபாராதனை ஆகியன நடந்தது.

Next Story