பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் மயான கொள்ளை விழா


பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் மயான கொள்ளை விழா
x
தினத்தந்தி 3 March 2022 8:03 PM IST (Updated: 3 March 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி பழைய பஜார் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 28-ந் தேதியன்று பெரியாண்டவர் பூஜையுடன் மயானச் சூறை பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் 3-வது நாளான நேற்று மயான சூறை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து திருத்தணி நந்தி ஆற்றங்கரையில் எழுந்தருளினார். பின்னர் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. அங்கு குடியிருந்த ஆயிரக்கணக்காண பொதுமக்கள் அம்மன் மீது காய்கறிகள், கொழுக்கட்டைகள் வீசி அம்மனை வழிப்பட்டனர். அதேபோல், பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் கீழ் கால் பட்டடை கிராமத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி தேவியை மேளதாளங்களுடன், அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்தனர். 

இறுதியாக கொசஸ்தலை ஆற்றில் மயானம் உள்ள பகுதியில் ஆற்று மணலில் பிரம்மாண்டமான உருவம் அமைக்கப்பட்டு அதன்மேல் பக்தர்கள் அளித்த கொழுக்கட்டை, சுண்டல், எலுமிச்சம்பழம், சாதம், பழ வகைகள் உள்பட பல விதமான தின்பண்டங்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்கள் அதை போட்டி போட்டுக் கொண்டு கொள்ளையடித்து எடுத்துச் சென்றனர்.


Next Story