சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில்நேற்று காலை திருப்பூர் அரிசிக்கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிசிக்கடை வியாபாரிகளுக்கும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் இடையே சுமைக்கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்தது. புதிதாக ஒப்பந்தம் அமைக்க காலம் கடத்தாமல் விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வியாபாரிகள் சங்கத்தினரை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க துணை செயலாளர் முருகசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், துணை செயலாளர் மூர்த்தி, சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் ராஜகோபால், பொருளாளர் சதாசிவம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story