திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 March 2022 8:31 PM IST (Updated: 3 March 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெறுகிறது

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே தொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம நாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த பணிகளை திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன்,  திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா, மண்டல துணை தாசில்தார் தங்கமணி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story