தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது
தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் திருவடி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42). தொழிலாளி. இவரது செல்போன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. இந்த செல்போனை தூத்துக்குடி குருவிமேடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் குருவி முருகன் என்ற முருகன் (40) என்பவர் தான் எடுத்ததாக முத்துப்பாண்டி கூறி வந்து உள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக முத்துப்பாண்டி தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் அருகே நின்று கொண்டிருந்தபோது குடிபோதையில் அங்கு வந்த குருவி முருகன், முத்துப்பாண்டியிடம் தகராறு செய்து கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குருவி முருகனை கைது செய்தார்.
கைதுசெய்யப்பட்ட குருவி முருகன் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story