கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கிய பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கிய பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்,:
கன்னிவாடி அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கஞ்சா கடத்திய கும்பல் போலீசாரிடம் சிக்கியது. அதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்பட்டி பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 27), தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பிரியா (36) உள்பட 6 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே திவாகர், பிரியா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் 2 பேரையும் கன்னிவாடி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story