மேட்டுப்பாளையம் நகராட்சியில் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்
மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் திடீரென்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேறொருவர் அறிவிக்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் திடீரென்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேறொருவர் அறிவிக்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. 22 இடங்களையும், காங்கிரஸ் 2, அ.தி.மு.க. 9 இடங்களையும் பிடித்தது.
இதில் தி.மு.க. பெரும்பான்மையாக இடங்களில் வெற்றி பெற்றதால் நகரசபை தலைவர் பதவியை கைப்பற்றியது. மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
எனவே தி.மு.க. சார்பில் போட்டியிடும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
கவுன்சிலர்கள் கூட்டம்
அதில் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் வேட்பாளராக 32-வது வார்டில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர் அருள் வடிவு அறிவிக்கப் பட்டார். இவருடைய கணவர் வக்கீல் முனுசாமி மேட்டுப்பாளையம் தெற்கு நகர செயலாளராக உள்ளார். இதையடுத்து பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூட்டம் வீட்டு வசதி வாரிய தலைவரும் தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான பூச்சி முருகன் தலைமையில் கோவையில் நடைபெற்றது
.
திடீர் மாற்றம்
இந்த கூட்டத்தில் யாரும் எதிா்பார்காத வகையில் திடீரென்று மேட்டுப் பாளையம் நகராட்சி தலைவர் வேட்பாளராக 4-வது வார்டில் வெற்றி பெற்ற மெஹரிபா பர்வீன் அறிவிக்கப்பட்டார். அருள்வடிவு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப் பட்டது.
நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் திடீரென்று மாற்றி அறிவிக்கப் பட்டதால் தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட அருள்வடிவும் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
தற்போது தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மெஹரிபா பர்வீன் கணவர் வக்கீல் அஸ்ரப்அலி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story