அடையாளம் தெரியாத பெண், சிகிச்சை பலனின்றி சாவு


அடையாளம் தெரியாத பெண், சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 3 March 2022 11:22 PM IST (Updated: 3 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயம் அடைந்த அடையாளம் தெரியாத பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் சுமார் 53 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.இவர் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story