டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
வேளாங்கண்ணி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
வேளாங்கண்ணி:
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், லூனி தாலுகா பர்சானா பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம். இவருடைய மகன் நேந்தர் (வயது 26). டிராக்டர் டிரைவர். இவர் வேளாங்கண்ணி அருகே தனியார் இறால் பண்ணையில் குளத்தை தூர்வாரி கரைகட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் மண்ணை கரைக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிரைவர் நேந்தர் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நேந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story