2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் ஆடி கல்லூரி மாணவிகள் சாதனை
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் 2 மணி நேரம் சிலம்பம் ஆடி மாணவிகள் சாதனை படைத்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் மாணவிகளின் சிலம்பாட்டம் நோபிள் உலக சாதனை நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது.கல்லூரியின் செயலர் ஜபருல்லாஹ்கான் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி மாணவிகள் 40 பேர் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் ஆடி உலக சாதனை படைத்தனர். இதில் சென்னை நோபிள் உலக சாதனை நிறுவன தலைமை மேலாளர் அரவிந்த் லட்சுமிநாராயணன் நடுவராக இருந்தார். பரிசளிப்பு விழாவில் சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான், முகமது அலி ஜின்னா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிலம்பம் பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக் குழு தலைவர் (பொறுப்பு) அப்துல்அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், அப்துல் சலீம் உள்பட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story