சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு


சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு
x
தினத்தந்தி 3 March 2022 11:45 PM IST (Updated: 3 March 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 

சிவகங்கை, மானாமதுரை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.இதில் தி.மு.க. சார்பில் 11 வார்டு உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேரும் சுயேச்சைகள் 5 பேரும் அ.தி.மு.க. சார்பில் 5 பேரும் அ.ம.மு.க. சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றனர்.இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் சி.எல். சரவணன், அ.ம.மு.க. கவுன்சிலர் கீதா மற்றும் 5 சுயேச்சைகள் ஏற்கனவே தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். இதனால் தற்போது சிவகங்கை நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 18 பேரும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும்,அ.தி.மு.க.கவுன்சிலர்கள் 4 பேரும் அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும் உள்ளனர்.
இந்த நகராட்சியில் தி.மு.க. பெரும்பான்மையுடன் உள்ளதால். தலைவர் துணைத்தலைவர் பதவி தி.மு.க. கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு 27-வது வார்டு கவுன்சிலர் துரைஆனந்த்(வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.ஏ. பட்டதாரியான துரை ஆனந்த் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் இருந்து வருகிறார். இவர் ஒன்றிய இளைஞரணி செயலாளராக 5 ஆண்டுகளும், சிவகங்கை நகர தி.மு.க. இளைஞரணி செயலாளராக 10 ஆண்டுகளும், சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளராக கடந்த 2008 முதல் இருந்து வருகிறார். தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு இவர் சிறை சென்றுள்ளார். இவரது மனைவி பெயர் ஆனந்தி. இவருக்கு ஹரிணி என்ற மகளும் ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். ஹரிணி பல் டாக்டர் ஆக இருக்கிறார். ஹரிஹரன் சிவில் என்ஜினீயர் ஆக இருக்கிறார்.

மானாமதுரை

மானாமதுரை நகராட்சி 27 வார்டுகளில் தி.மு.க. 14 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும், சுயேச்சை 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2-ந் தேதி அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். தி.மு.க.வுக்கு 14 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ளதால் தலைவர், துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
இதில் நகராட்சி தலைவர் பதவிக்கு 27-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.மாரியப்பன் கென்னடியை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்ததால் போட்டியின்றி தேர்வு ஆகிறார். இவரது வயது 44 ஆகும். பி.ஏ. படித்துள்ள மாரியப்பன் கென்னடி மானாமதுரையில் 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து உள்ளார். இவரது மனைவி ராேஜஸ்வரி சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story