பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 3 March 2022 11:57 PM IST (Updated: 3 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரம், 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதைதொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட ஊர்களில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. 

கடல் உள்வாங்கியது

இதனால் 900-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. 
பாம்பன் வடக்கு கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் தென் கடலான மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. குறிப்பாக பாம்பன் சின்னப்பாலம் மற்றும் குந்துகால் பகுதியிலும் நேற்று பகல் நேரத்தில் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான மீன்பிடி படகுகள் மணல் பரப்பில் தரைதட்டி கிடந்தன. பிற்பகல் 3 மணிக்கு பிறகு மீண்டும் கடல்நீர் ஏறி சகஜ நிலைமைக்கு திரும்பியது.

Next Story