சோளிங்கர் நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.26 லட்சத்து 94 ஆயிரம்
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ.26 லட்சத்து 94 ஆயிரம் கிடைத்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோவில் செயல் அலுவலர் ஜெயா தலைமையில் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் உதவி ஆணையர் தியாகராஜன், அரக்கோணம் ஆய்வாளர் பிரியா, திருத்தணி ஆய்வாளர் நிர்மலா, கோவில் கண்காணிப்பாளர் விஜயன், சுரேஷ் ஆகிேயார் முன்னிலையில் சோளிங்கரில் உள்ள யோக லட்சுமி நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில், ஊர் கோவிலான பக்தோசித பெருமாள் கோவில்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட உண்டியல்களை பாதுகாப்பாகக் கொண்டு வந்து, ஊர் கோவிலான பக்தோசித பெருமாள் கோவில் வளாகத்தில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரொக்கமாக ரூ.26 லட்சத்து 94 ஆயிரத்து 80-ம், 80 கிராம் தங்கம், 340 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story