ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வு கூட்டம்
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நொய்யல்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனரின் உத்தரவின்படி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாரின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் இ.எம்.ஐ.எஸ். மூலம் கண்டறியப்பட்டு 337 குழந்தைகளை கள ஆய்வு செய்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளவர்களில் 44 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து வகையான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ஈடுபட்டுள்ளனர். 337 குழந்தைகளுக்கும் கள ஆய்வு முடிக்கப்பட்ட நிலையில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கள ஆய்வு குறித்து மீளாய்வு செய்தார்.மேலும் நடைபெற்ற மாநில திட்ட இயக்குனர் காணொலிவழி மீளாய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கிணங்க 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்களை கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சண்முகவடிவு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story