அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை எனும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி மற்றும் மலையாள கருப்புசாமி கோவிலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநங்கை வினோதினி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு மேட்டு மகாதானபுரத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அழைத்துவரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் பெண் அசுரர் வடிவில் வடிவமைக்கப்பட்ட பொம்மையின் மீது திரிசூலம் கொண்டு வதம் செய்து வழிபட்டனர். இதுவே மயான கொள்ளை நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இதனை மகாதானபுரம், பழைய ஜெயங்கொண்டம், புதுப்பட்டி, ஓமந்தூர் சித்தலவாய், கோவளம், பிச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story