தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 March 2022 12:12 AM IST (Updated: 4 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளியில் விளாங்குடி, காத்தான்குடிகாடு, ஓரத்தூர், தேளூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து  186 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் கால்நடைகள் வளாகத்தில் செடிகளை மேய்கின்றது. அப்போது விளையாடி கொண்டிருக்கும் மாணவர்களை மாடுகள் முட்ட செல்வதால் மாணவர்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. பள்ளி அருகே அப்பகுதியில் உள்ளவர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக  பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வி.கைகாட்டி, அரியலூர்.
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 பொதுமக்கள், அகரம்சீகூர்,  பெரம்பலூர்.
கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் 9-வது வார்டு கிழக்கு தெரு தபால் நிலையம் செல்லும் சாலையில் இரண்டு புறமும் முட்புதர்கள் மண்டி கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதி பொதுமக்கள் சென்று வர வசதியாக இரண்டு புறம் இருக்கின்ற முட்புதர்களை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி, புதுக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் செல்லும் சாலையில் டி.என்.பி.எல். கழிவு நீரேற்றும் நிலையம் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் வழியாக சொக்கன் காடு, சொட்டையூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மின் கம்பத்தில் செடி, கொடிகள் முளைத்து மின் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின் கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம், கரூர்.



        

        

Next Story