கண்மாய் பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த 200 ஆடுகள்


கண்மாய் பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த 200 ஆடுகள்
x
தினத்தந்தி 4 March 2022 12:18 AM IST (Updated: 4 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் ஒரே நேரத்தில் 200 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் ஒரே நேரத்தில் 200 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுகள் இறப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் அலப்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். 
இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி அலப்பச்சேரி கண்மாய் பகுதியில் அவருக்கு சொந்தமான 250 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். 
இந்தநிலையில் ஆடுகள் இரைத்தேடி உண்ணும்போது ஒன்றன்பின் ஒன்றாக மேய்ச்சலில் இருந்த கிட்டத்தட்ட 200 ஆடுகள் ஒரே நேரத்தில் ஆங்காங்கே மயங்கி விழுந்தன. பின்னர் அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனால் இப்பகுதியில் சோகம் நிலவியது. மேலும் 50 ஆடுகள் உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது. 
பரபரப்பு
இதுவரை கால்நடை துறையில் இருந்து தகவல் தெரிந்தும் யாரும் இப்பகுதி வந்து பார்க்கவில்லை என உரிமையாளர் கூறினார். மேலும் கடந்த மாதம்தான் ஆடுகளுக்கு அம்மை நோய் தடுப்பு ஊசி போட்டுள்ளதாக தெரிவித்த அவர் எதனால் ஆடுகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை என கூறினார். ராஜபாளையம் பகுதியில் ஒரே நேரத்தில் 200 ஆடுகள் மர்மமான முறையில் இருந்து கிடந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆடுகள் திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து கால்நடை துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Story