ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான வகையில் கையில் பெரிய பையோடு சுற்றிக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன்(வயது 54) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் லட்சுமிநகரில் உள்ள ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்த போது அங்கு 56 கிலோ எடை கொண்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story