மைத்துனருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது


மைத்துனருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 4 March 2022 12:23 AM IST (Updated: 4 March 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மைத்துனரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம் (வயது 25). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி குடும்பத்தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு சிவராஜபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆனந்தசெல்வம் தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆனந்தசெல்வத்தின் மைத்துனர் பெயிண்டரான மணிகண்டன் (27) அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தசெல்வத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story