5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு
சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் 5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில் பனிலிங்கம் நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பனிலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story