தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா
நெல்லை போலீஸ் சரகத்தில் முதன்முறையாக தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமராவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
நெல்லை போலீஸ் சரகத்தில் முதன்முறையாக தென்காசியில் அதிநவீன கண்காணிப்பு கேமராவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.
நவீன கண்காணிப்பு கேமரா
தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தென்காசியின் மையப்பகுதியான நெல்லை- தென்காசி சாலையில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் தென்காசி மீரான் மருத்துவமனை நிதி உதவியுடன் அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார். மேலும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
போலீஸ் சரகத்தில் முதன்முறை
இந்த கண்காணிப்பு கேமரா, சாலையில் செல்லும் அனைத்து வாகன எண்களையும் தானியங்கி முறையில் புகைப்படமாக எடுத்து பதிவு செய்யும் வகையில் செயல்படும்.
மேலும் நெல்லை போலீஸ் சரகத்தில் முதன்முறையாக தென்காசியில் வைக்கப்பட்டுள்ள இந்த கேமரா மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வைப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்.
குற்றச்செயலில் ஈடுபட்டு இந்த வழியாக தப்பிச்செல்லும் வாகனங்களின் முழு விவரங்களை கண்டுபிடிக்க இது பயன்படும். இதில் பதிவு செய்யப்பட்ட எண்கள் சுமார் 20 நாட்கள் அதில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மீரான் மருத்துவமனை டாக்டர் அப்துல் அஜீஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story