மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.
மதுரை,
மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
மதுரை மாநகர போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மதுரை குருவிக்காரன் சாலை தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்ற வேலை நடைபெற்ற காரணத் தால் கடந்த 2 வருடங்களாக, அந்த வழியாக செல்லும் வாகன போக்குவரத்து பனகல் சாலை, கோரிப்பாளையம், ஏ.வி.பாலம் வழியாகவும் மற்றும் அண்ணாநகர் தெப்பக்குளம் சந்திப்பு வழியாகவும் திருப்பிவிடப்பட்டு இருந்தது.
இதனால், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் சந்திப்பு அதிக போக்குவரத்து நெருக்கடியுள்ள பகுதிகளாக மாறியது. தற்போது குருவிக்காரன் சாலை பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மதுரை நகர பெருமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை புறநகர் பகுதிகளான அழகர்கோவில், புதூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மேலூர் சாலையில் இருந்து அவனியாபுரம், மதுரையின் மையப் பகுதியான மீனாட்சியம்மன் கோவில்.
ஆற்றுப்படுகை
பெரியார் பஸ் நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கே.கே. நகர் ஆர்ச், 80 அடிச்சாலை ஆவின் சந்திப்பு - அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு வழியாக குருவிக்காரன் சாலை சந்திப்பு, கணேஷ் தியேட்டர் சந்திப்பு வழித்தடத்தை பயன்படுத்தி நெருக்கடியற்ற, இலகுவான மற்றும் விரைவான போக்குவரத்து வசதியை பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், பாலத்தின் ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விரைவுச் சாலையை பயன் படுத்தினால் விரகனூர் பை-பாஸ் சாலையை விரைவில் வந்தடையலாம். வாகன ஓட்டிகள் இந்த புதிய பாலத்தில் பயணிப்பதின் மூலம் மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், தெற்குவாசல், கீழவாசல், நெல் பேட்டை, முனிச்சாலை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story