ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாகம்


ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாகம்
x
தினத்தந்தி 4 March 2022 2:29 AM IST (Updated: 4 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர யாகம் நடந்தது.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக குபேர யாக வேள்வி நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோவிலில் குபேர யாக வேள்வி நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த வேள்வியில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு மஹாபூர்ணாஹுதியும், தொடர்ந்து குபேர பெருமானுக்கு பால், தயிர், கலச தீர்த்தங்களால் அபிஷேகமும் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த வேள்வியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story