ஈரோடு மாநகராட்சி மேயர்- துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு


ஈரோடு மாநகராட்சி மேயர்- துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2022 3:56 AM IST (Updated: 4 March 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேயர் -துணை மேயர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் தேர்வு நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நாகரத்தினம், துணை மேயர் பதவிக்கு செல்வராஜ் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோல் பவானி நகராட்சி தலைவர் பதவிக்கு இ.சிந்தூரி, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கு ஜானகி ராமசாமி, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு ஜனார்த்தனன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகள் தீவிரம்
கோபி நகராட்சியை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. வழங்கி உள்ளது. கோபி நகராட்சி தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் பேசி வருகிறார்கள்.
இதையொட்டி ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேயர் அறையை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கு பெட்டி அமைக்கும் பணியும் நேற்று தீவிரமாக நடந்தது.

Next Story