பவானி செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பவானி செல்லியாண்டிம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பவானி
பவானி செல்லியாண்டிம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
செல்லியாண்டியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் வகையறா கோவில்களின் திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 23-ந் தேதி கொடிஏற்று விழா நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் பெண்கள் நேரடியாக சாமிக்கு நீராட்டு நடத்தும் பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பூமிதி விழா மாரியம்மன் கோவிலில் நடந்தது.
நேற்று முன்தினம் செல்லியாண்டியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசி அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் எல்லைமாரியம்மன் கோவில் அருகே தண்ணீரில் நனைந்த சேற்றினை எடுத்து உடலில் பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். மாலையில் ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பொங்கல் விழா நடந்தது. இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தேரோட்டம்
நேற்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேர் பவானி பூக்கடை வீதி, பி.என்.ஜி. கார்னர் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
Related Tags :
Next Story