கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி தற்கொலை


கடன் தொல்லையால்   காய்கறி வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2022 5:02 AM IST (Updated: 4 March 2022 5:02 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
வியாபாரி
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பருத்திக்கோட்டவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 47), காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ராஜினி (41).  கிறிஸ்டோபர் பலரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும், அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். 
இதனால், கடந்த சில நாட்களாக கிறிஸ்டோபர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார்.
தற்கொலை 
இந்தநிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்டோபர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிறிஸ்டோபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து கிறிஸ்டோபரின் மனைவி ராஜினி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன்தொல்லையால் காய்கறி வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story