தலைமைச் செயலக ஊழியர் போல் நடித்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது


தலைமைச் செயலக ஊழியர் போல் நடித்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 4 March 2022 2:25 PM IST (Updated: 4 March 2022 2:25 PM IST)
t-max-icont-min-icon

தலைமைச் செயலக ஊழியர் போல் நடித்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 31). இவர், சென்னை பெரியமேடு பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லம் நடத்த அரசு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

அப்போது முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்றிருந்த மர்மநபர் ஒருவர், சங்கீதாவிடம் தன்னை தலைமைச் செயலக ஊழியர் என்று கூறியதுடன், ஆதரவற்றோர் இல்லம் நடத்த அரசு அனுமதி பெற்றுத்தர ரூ.1 லட்சம் செலவாகும். முன்பணமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றார். அதை உண்மை என்று நம்பிய சங்கீதா, ரூ.50 ஆயிரத்தையும் கொடுத்தார். ஆனால் அந்த நபர், சொன்னபடி ஆதரவற்றோர் இல்லத்துக்கான உரிய அரசு அனுமதியை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் மோசம் போய்விட்டதை உணர்ந்த சங்கீதா, அந்த நபரை பிடித்து, பெரியமேடு போலீசில் ஒப்படைத்தார்.

இந்த வழக்கு கோட்டை போலீசுக்கு மாற்றப்பட்டது. கோட்டை போலீசார் வழக்குப்பதிவு மோசடியில் ஈடுபட்ட கொளப்பாக்கத்தைச் சேர்ந்்த ஜெயக்குமார் (51) என்பவரை கைது செய்தனர். அவர், சென்னையில் கொரோனா நோய் தடுப்பு பிரிவில் அவர் தற்காலிக ஊழியராக முன்பு வேலை செய்ததாக கூறப்படுகிறது.


Next Story