627 முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
627 முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் சிறார்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 21 லட்சத்து 10 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 58 ஆயிரத்து 747 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து 89 ஆயிரத்து 455 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. இன்று சனிக்கிழமை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் ஆன சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இந்த முகாமில் போடப்படுகிறது. 627 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் முகாம் நடக்கிறது. 2 ஆயிரத்து 508 பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story