சேதமடைந்த பயணிகள் நிழற்குடை


சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
x
தினத்தந்தி 4 March 2022 7:09 PM IST (Updated: 4 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை 
கணியூரில் இருந்து  மடத்துக்குளம் செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் அருகில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிகற்குடை  முற்றிலும் சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.  இந்த  மருத்துவமனைக்கும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்துதான் பஸ்சில் ஏறி செல்கிறார்கள். ஆனால் நிழற்குடை மோசமாக உள்ளதால அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
சாக்கடைவாய்க்காலை தூர்வார வேண்டும் 
திருப்பூர்  தென்னம்பாளையம் பின்புறம் எம்.ஜி.ஆர்.மன்றம் அருகில் சாக்கடை வாய்க்கால் தூர்வாராததால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாகி பொதுமக்களுக்கு காய்ச்சால் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கு தீ வைப்பதால் 
பொதுமக்கள் அவதி
திருப்பூர் கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் ரோட்டில் ஒரு பனியன் நிறுவனம் மற்றும் பேக்கரி எதிரே மர்ம ஆசாமிகள் குப்பைக்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருகில் உள்ளவர்கள் குப்பைகளைகொட்டாமல் இருப்பதற்கும், யாரும் தீ வைக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Next Story